டிஜிபி நியமனம் தொடர்பாக ஒருவாரத்தில் பெயர் பட்டியல் தர தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

 
supreme court supreme court

தமிழ்நாட்டிற்கு டிஜிபியாக நியமிக்கப்படுவதற்கான பெயர்களை ஒரு வார காலத்திற்குள் யுபிஎஸ்சி அமைப்புக்கு பரிந்துரையாக வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழ்நாட்டில் அடுத்த டிஜிபி யார் என்பதற்கான பெயர் பட்டியலை யுபிஎஸ்சியிடம் ஒரு வாரத்துக்குள் பரிந்துரைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டிஜிபியை தேர்வு செய்யும் குழுவில் உள்துறை கூடுதல் செயலர் இடம்பெற வேண்டும், தமிழக டிஜிபி தேர்வுக்கான குழுவில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 அதிகாரிகள் இடம்பெற வேண்டும். தமிழ்நாடு சட்டம், ஒழுங்கு டிஜிபியை தேர்ந்தெடுக்க UPSC-க்கு ஒரு வாரத்தில் பெயர்களை பரிந்துரை செய்ய வேண்டும் என தமிழக டிஜிபி நியமனம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு வழங்கும் பரிந்துரைகளை இரண்டு வார காலத்திற்குள் இறுதி செய்ய வேண்டும் என யுபிஎஸ்சிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையை 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும், எங்களுக்கு சிறந்த டிஜிபி தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பு வாதத்தை முன் வைத்தது.