தமிழகத்திற்கு 5000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் - கர்நாடக அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

 
supreme court

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின்படி தமிழகத்திற்கு 5000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனையடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை நாடியது தமிழக அரசு. இதனை தொடர்ந்து தமிழகத்திற்கு  5000 கன அடி நீர் தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை பின்பற்றாத கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு நேற்று  இடைக்கால மனு தாக்கல் செய்தது.
 
இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துளது.   காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை அமல்படுத்த் கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   காவிரியில் வினாடிக்கு 5,000 கன அடி நீரை திறக்க காவிரி மேலாண்மை ஆணையம்  உத்தரவிட்டிருந்தது.  காவிரியில் 24,000 கன அடி நீரை திறக்க கோரும் தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. வறட்சி கால அட்டவணைப்படி தமிழ்நாட்டுக்கான உரிய நீரை கர்நாடகா திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது