சூர்யாவின் ‘மௌனம் பேசியதே’ ரீ-ரிலீஸ்..!

 
1 1

சூர்யாவின் திரையுலகப் பயணத்தில் ஒரு மிகமுக்கிய மைல்கல்லான ‘மௌனம் பேசியதே’ திரைப்படம், வரும் பிப்ரவரி 13ஆம் தேதி மீண்டும் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் காதல் கதைகளுக்குப் பஞ்சமே இல்லை. ஆனால், “காதலே பிடிக்காது” என்று சொல்லும் ஒரு நாயகன், இறுதியில் காதலில் விழுவதை ரத்தமும் சதையுமாகச் சொன்ன படங்கள் மிகக்குறைவு. அந்த வரிசையில் 2002ஆம் ஆண்டு வெளியாகி, இளைஞர்களின் மனதைக் கொள்ளையடித்த படம் ‘மௌனம் பேசியதே‘. சரியாக 24 ஆண்டுகளுக்குப் பிறகு, நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி இத்திரைப்படம் மீண்டும் வெளியாகிறது.

பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு, அதற்கு ஒரு நாள் முன்பாகவே (பிப்ரவரி 13) இந்தப் படம் திரையரங்குகளுக்கு வருகிறது.

த்ரிஷா நாயகியாக நடித்த முதல் படமும் இதுதான். அதேபோல், சூர்யாவுக்கு இது ஒரு முக்கியமான படம். ஆரம்பக்காலத் தடுமாற்றங்களுக்குப் பிறகு, ஒரு நடிகராக அவர் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட படம் இது. இதில் அவர் ஏற்று நடித்த ‘கௌதம்’ கதாபாத்திரம், பெண் மீதும் காதல் மீதும் ஒரு மாறுபட்ட பார்வையைத் தரும். ஆண்களால் அதிகம் ரசிக்கப்பட்ட ஒரு ‘கெத்தான’ கேரக்டர் அது. சூர்யா, திரிஷாவுடன் இணைந்து லைலா, நந்தா மற்றும் செந்தில் என ஒரு பெரும் நட்சத்திரப் பட்டாளமே இதில் உள்ளது.

இயக்குநர் அமீரின் முதல் படம் இது என்று சொன்னால் பலரும் நம்ப மாட்டார்கள்..