முதல்வரோடு கைகோர்த்து களமிறங்கிய சூர்யா

 
ss

 ஜெய்பீம் விவகாரத்தில் பாமகவினர் சூர்யாவை விடாது துரத்திக் கொண்டிருக்க தற்காலிக ஓய்வுக்காக அவர் குடும்பத்துடன் வெளிநாடு சென்றிருப்பதாக தகவல். இதனால்,  சூர்யாவை காணவில்லை என்று டுவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றார்கள்.  இதைப்பற்றி எல்லாம்  கவனத்தில் எடுத்துக்கொண்டு டென்சன் ஆகாமல் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோருடன் கைகோர்த்து களமிறங்கியிருக்கிறார் சூர்யா.

கல்வி மேம்பாட்டுக்காக அகரம் அறக்கட்டளையை தொடங்கியவர் சூர்யா.  அதிக மதிப்பெண் எடுத்து  மேல்படிப்பு படிக்க முடியாத மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்கி வருகிறது அகரம் அறக்கட்டளை.  கல்வி தொடர்பான பிரச்சனைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது அகரம்.  

ச்ச்

இத்தோடு நில்லாமல்,   தமிழ்நாட்டில் கல்வித்தரத்தை உயர்த்தவும் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும் அரசுடன் கைகோர்த்து  சூர்யாவின் அகரம் அறக்கட்டளை செயல்பட்டு வருவதாக தகவல்.   பள்ளி மேலாண்மைக்குழு அமைக்க கடந்த ஐந்தாண்டு காலமாக சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் விடாமுயற்சி எடுத்து வந்து இருக்கிறது.   திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் அகரம் பவுண்டேசன் சார்பாக கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகனிடம் இது தொடர்பாக பேசியிருக்கிறார்கள். அவர் இதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்.   

திட்டத்தை கேட்டதும் முதல்வர் அதற்கு சம்மதித்திருக்கிறார்.   கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் இதுகுறித்து கலந்து ஆலோசனை செய்யுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.    கல்வித் துறை அமைச்சரும் இதற்கு சம்மதித்து. இதன் பின்னர் துரிதகதியில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மேலாண்மைக்குழு அமைப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

முதலில்  100 முன்கள பணியாளர்களை தேர்வு செய்து திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் இயங்கிவரும் தனியார் கல்லூரியில் கடந்த நவம்பர் 18 ,19, 20 ஆகிய மூன்று நாட்களில் பயிற்சி முகாம் நடைபெற்றிருக்கிறது.  அகரம் பவுண்டேஷன் தான் ஒருங்கிணைப்பு செய்திருக்கிறது.  3 நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சி கூட்டத்தில் களப்பணியாற்ற ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள்,  கல்வியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

அன்

 பயிற்சியின் தொடக்க நாளில் கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் கலந்து கொண்டிருக்கிறார்.  தேசிய இடைநிலை கல்வி திட்ட இயக்குனர் ராசு தன் மூன்று நாட்கள் பங்கேற்றிருக்கிறார்    பள்ளி மேலாண்மைக்குழு அமைக்கின்ற பணியில் பயிற்சி எடுத்துக்கொண்ட 100 பேரும் 4 குழுவாகப் பிரித்து நான்கு மண்டலத்துக்கு நியமிக்கப் பட்டுள்ளார்கள்.  இவர்கள் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஆயிரம் பேரை தேர்வு செய்து மொத்தம் நாலாயிரம் பேருக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  

 வரும் 2022ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் வேளாண்மை குழு அமைத்து சிறப்பாக செயல்பட வைக்க திட்டமிட்டு இருக்கிறார்.  முதல்வரின் இந்த முயற்சிக்கு சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் உறுதுணையாக இருக்கும் என்று சூர்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.