சூர்யாவை காணவில்லை! சமூக வலைதளங்களில் போஸ்டர் வைரல்
நடிகர் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளிவந்த படம் ஜெய் பீம். இதில் குறிப்பிட்ட சில சமூகத்தினரை மட்டும் குறிப்பிட்டு சித்தரித்து காண்பிப்பதை கண்டித்து பல்வேறு தரப்பினரும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். மேலும் ஒரு சிலர் தங்களின் ஆதரவையும் தெரிவித்தனர் . இதனால் நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு இடப்பட்டது . இதனிடையே பல்வேறு மாவட்டங்களிலும் பாமக சார்பில், வன்னியர் சமுதாயத்தை இழிவு படுத்தியதாக கூறி நடிகர் சூர்யா மற்றும் பட இயக்குனர் ஞானவேல் ஆகிய இருவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சூர்யாவை காணவில்லை என சமூக வலைதளங்களில் ஒரு போஸ்டர் வைரலாகிவருகிறது. அதில், பணத்திற்காக தமிழ் சமூகத்தின் ஆகப்பெரிய சமூகமான வன்னியர்களை அவதூறாக பதிவு செய்தவர் கடந்த சில நாட்களாக காணவில்லை. அவரை பார்த்தால் வன்னியர் சமூகம் வலைவீசி தேடுகிறோம் என்ற தகவலை தெரிவித்துவிடுங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவனைப் பற்றி தகவல் தெரிவித்தால் நாமக்கல் கிழக்கு பாட்டாளி மக்கள் கட்சி, மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் ரூ,25000-ம் சன்மானம் வழங்கப்படும் என ஆமோகன்ராஜ், EX,MC,BA,DCo-op, மாவட்டச் செயலாளர்,நாமக்கல் கிழக்கு மாவட்டம் என்பவர் போஸ்டர் அடித்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார்.