தூய்மை பணியாளர் மேரியை நேரில் அழைத்து பாராட்டிய எஸ்.வி.சேகர்

 
me

 குப்பையில் கிடந்த ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள 100 கிராம் தங்கத்தை மிக நேர்மையாக உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர் மேரியின் நற்செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.    நடிகரும் முன்னாள் மயிலாப்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். வி. சேகர் நேரில் நேரில் அழைத்து பாராட்டி,  பாராட்டு சான்றிதழ் வழங்கி ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து சிறப்பு செய்திருக்கிறார்.

s

சென்னை திருவொற்றியூரில் குப்பைகளை தரம் பிரிக்கும்போது,  100 கிராம் எடையுள்ள தங்க நாணயம் கிடைத்ததால் அதிர்ச்சி அடைந்தார் துப்புரவு பணியாளர் மேரி . அவர் நேர்மையுடன், உடனடியாக அதனை தனது மேலதிகாரி கௌதம் என்பவரிடம் மேரி ஒப்படைத்தார்.  அவருடன் நேர்மையாக, இதனையடுத்து உரியவர்கள் தேடி வந்தால் ஒப்படைப்பதற்காக கௌதம் காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தார். 

விசாரணையில், திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் கணேஷ் ராமன் மற்றும் அவரது மனைவி ஷோபனா ஆயுத பூஜையை முன்னிட்டு வீடுகளை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குப்பைகளுடன் சேர்த்து தவறுதலாக 100 கிராம் தங்க நாணயத்தை குப்பை தொட்டியில் வீசியுள்ளனர். பின்னர் வீடுகளை தூய்மை செய்து விட்டு பார்த்தபோது நகை காணாமல் போனது தெரியவந்திருக்கிறது.

me

இதனையடுத்து அப்பகுதியில் தூய்மைப் பணியாளர்களிடம் தகவல் தெரிவித்துவிட்டு சாத்தாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 100 கிராம் தங்க நாணயம் கிடைத்திருப்பதாக துப்புரவுத் தொழிலாளர் காவல் நிலையத்தில் தெரிவித்ததையடுத்து, கணேஷ் ராம் குடும்பத்தினர் வரவழைக்கப்பட்டனர்.

தூய்மைப் பணியாளர் மேரி 100 கிராம் நாணயத்தை கணேஷ் ராமிடம்  ஒப்படைத்தார். ஐந்து லட்சம் மதிப்புள்ள 100 கிராம் தங்க நாணயம் குப்பையில் கிடந்தாலும் அதனை அபகரிக்க நினைக்காமல் காவல்நிலையத்தில் ஒப்படைத்த துப்புரவு பணியாளர் மேரியின் நேர்மையை பாராட்டி சாத்தாங்காடு காவல் ஆய்வாளர் மேரிக்கு மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில்,  எஸ்.வி.சேகர் பாராட்டி வழங்கிய பாராட்டு கடிதத்தில்,   ‘’அன்புள்ள,  மரியாதைக்குரிய மேரி அவர்களுக்கு வணக்கம் . துப்புரவு பணியாளர் உங்கள் நற்செயலை பாராட்டிக் கடிதம்.   தவறுதலாக குப்பையில் போடப்பட்ட 100 கிராம் எடையுள்ள ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை குப்பையை பிரிக்கும்போது கண்டுபிடித்த நீங்கள் போலீசாரை உடனடியாக தொடர்பு கொண்டு அந்த தங்கத்தை உரியவரிடம்  ஒப்படைத்த நல்ல மனத்தையும், குணத்தையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.  பணமே முக்கியம் நேர்மையாக வாழ்வது மிக கடினம் என நினைக்கும் இக்காலத்தில் வறுமையிலும் ஏழ்மையிலும் அடுத்தவர் பொருள் நமக்கு வேண்டாம் என நினைத்த உங்களின் மிகப்பெரிய நேர்மையான செயலைப் பாராட்டி என் தொண்டு நிறுவனத்தின் மூலமாக ரூபாய் ஐந்தாயிரம் தங்களுக்கு வழங்குவதில் பெருமையடைகிறேன்.  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் அனைத்து செல்வங்களையும் நோயற்ற வாழ்வையும் வழங்க ஆண்டவனை வேண்டுகிறேன்.  என்றும் அன்புடன் எஸ். வி. சேகர்.’’ என்று குறிப்பிட்டுள்ளார்.