எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதிப்பு!

 
tn

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து கடந்த 2018 ஆம் ஆண்டு எஸ்.வி.சேகர் சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டார் .இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில் இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.  இப்புகாரின் அடிப்படையில் எஸ்வி சேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துடன் கடந்த 2020 ஆம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் யூடியூபில் எஸ்.வி. சேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.  

sv

இந்த இரண்டு வழக்குகளையும் ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி. சேகர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எஸ்.வி சேகருக்கு எதிரான வழக்கை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும்,  தேசிய கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்தும் தீர்ப்பு வழங்கினார்.
 

gtn

இந்நிலையில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பேஸ்புக் பக்கத்தில் அவதூறாக பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒருமாதம் சிறை தண்டனை, ₹15,000 அபராதம் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாக அவர் தெரிவித்ததை அடுத்து சிறை தண்டனை நிறுத்திவைப்பு. அபராத தொகையை செலுத்தினார்.