உலகம் போற்றிய சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்தநாள் இன்று - தினகரன் ட்வீட்

 
TTV TTV

சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளையொட்டி தினகரன் அவரை போற்றி புகழ்ந்துள்ளார்.

tn

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 ஆம் தேதி தேசிய இளைஞர் நாள் (National Youth Day) என இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1984 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இந்நாளினை "தேசிய இளைஞர் நாளாக" அறிவித்தது, அதைத்தொடர்ந்து 1985-ல் ஜனவரி 12-ம் தேதி முதன்முதலாக கொண்டாடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.


இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைதள பக்கத்தில் , தன்னம்பிக்கை உள்ளவர்களால் மட்டுமே தலைசிறந்த மனிதர்களாக உருவெடுக்க முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த உலகம் போற்றிய சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்தநாள் இன்று.

 இந்தியாவின் சுதந்திர உணர்வை தட்டி எழுப்பியதோடு, சாதி, மதங்களைக் கடந்து இளைஞர்களின் வழிகாட்டியாக திகழ்ந்த சுவாமி விவேகானந்தர் அவர்களின் கொள்கைகளைப் பின்பற்றி நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க அவர் பிறந்த இந்நாளில் உறுதியேற்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.