ஆக.14இல் அரசு பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல்

 
tn

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆக.14இல்  இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

stalin

சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று இனிப்பு பொங்கல் வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு கடந்த மே மாதம் வெளியிட்டது.  தமிழ்நாடு முழுவதும் உள்ளான காமராஜர் ,அண்ணா ,எம்ஜிஆர் , ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாள் அன்று இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டு வருகிறது.  இதேபோல கருணாநிதி பிறந்த நாளன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி சட்டப்பேரவையில் அமைத்து கீதா ஜீவன் அறிவித்திருந்தார்.

அங்கன்வாடி மையங்களில் இரண்டு முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் மூன்றாம் தேதியன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.

govt

இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஆகஸ்ட் 14ஆம் தேதி சத்துணவு திட்டத்தில் பயன்பெறும்  பள்ளி மாணவ,  மாணவியர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜூன் மூன்றாம் தேதி கோடை விடுமுறை என்ற காரணத்தினால் ஆகஸ்ட் 14ஆம் தேதி இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.