குவைத் தீ விபத்து துரித நடவடிக்கை எடுக்க திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் கடிதம்!!

 
tt tt

குவைத் தீ விபத்து துரித நடவடிக்கை எடுக்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப் பாட்டுக் குழு தலைவருமான கே.சுப்பராயன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நாற்பதற்கும் மேற்பட்டவர்களை பலியாகி உள்ளனர்.  இதில் ஒன்றிய அரசு துரித நடவடிக்கை எடுத்து பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சையும் உதவிகளும் கிடைக்க செய்ய வேண்டும் என்று திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப் பாட்டுக் குழு தலைவருமான கே.சுப்பராயன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார். மிகுந்த மன உளைச்சலுடன் இக் கடிதத்தை தங்களுக்கு நான் எழுதுகிறேன்.

tttt

குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்து செய்தி அறிந்து நாடே அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது. துரதிஷ்ட வசமான இந்த விபத்து 40 ம் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையை நாசமாக்கியுள்ளது. இந்த விபத்தில் உற்றார் உறவினர்களை இழந்தவர்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில், குவைத்தில் உள்ள அனைத்து இந்தியர்களின் அச்சத்தையும் போக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டிய தருணம் இது.
எனவே, தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள் மற்றும் விபத்தில் காயமடைந்தவர்களின் பட்டியலை உடனடியாக வெளியிட அரசு வேண்டும். இந்தியர்களின் உடல்களை கொண்டு வந்து அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க அமைச்சகம் உடனடியாக துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

tt
காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சையை வழங்க குவைத்தில் உள்ள தூதரகத்துடன் தொடர்பு கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமாயும் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். விபத்தில் பாதிக்கப் பட்டவர்களின் நெருங்கிய உறவினர்கள் சென்றுவர விரும்பினால் அவர்களின் பயணத்திற்கும் அமைச்சகம் ஏற்பாடு செய்ய வேண்டுமாயும் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.