கருணாநிதி பற்றி பேச்சு! தொழிலதிபர் சிறையிலடைப்பு

 
ks

முதல்வர் மு. க. ஸ்டாலின்,  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் பற்றி அவதூறாக பதிவிட்டிருந்ததாக எழுந்த புகாரில் தொழிலதிபர் ஜான் ரவி கைது செய்யப்பட்டுள்ளார் .

சென்னையில் கொட்டிவாக்கம் ஓஎம்ஆர்  சாலையில் வசித்து வருபவர் ஜான் .  40 வயதான இந்த வாலிபர் தொழிலதிபர் மற்றும் பாஜக ஆதரவாளராகவும் உள்ளார். ஜான் ரவி அரசியல் தொடர்பான கருத்துக்களை தனது சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பதிவிட்டு வந்துள்ளார் .  

st

அந்த வகையில் கடந்த 21ஆம் தேதி அன்று முதல்வர் மு. க. ஸ்டாலின் குறித்தும்,  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும் கருத்து பதிவிட்டு இருந்தார்.  இது அவதூறாக கூறப்பட்டிருப்பதாக திமுகவினர் கொதித்தெழுந்தனர்.   திருவிடைமருதூர் அருகே பந்தநல்லூர் சாலையைச் சேர்ந்த திமுக ஐடி விங் செயலாளரும் அரசு வழக்கறிஞருமான ராஜசேகர்,  இது குறித்து பந்தநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

 பந்தநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ,  தொழிலதிபர் ஜான் ரவி மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார் .  பின்னர் போலீசார் விசாரணை  விசாரணை நடத்திய போது ஜான் ரவி குஜராத்தில் இருந்தது தெரிய வந்திருக்கிறது.   குஜராத்தில் இருந்த ஜான் ரவி கடந்த 25ஆம் தேதி கைது செய்யப்பட்டு திருவிடைமருதூருக்கு அழைத்து வரப்பட்டு உள்ளார். 

 திருவிடைமருதூரில் உரிமையியல் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று அவரை ஆச்சரியப்படுத்தி உள்ளார்கள்.   ஜான்ரவியை விசாரித்த நீதிபதி   மார்ச் 13ஆம் தேதி வரைக்கும் அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டு உள்ளார்.   ஜான் ரவி தாக்கல் செய்த ஜாமீன் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்.