தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகம் திறப்பு!

 
cm

ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களை காணொலி வாயிலாக திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.  ஆவடி காவல் ஆணையர் கட்டுப்பாட்டில் 25 காவல் நிலையங்களும்,  தாம்பரம் காவல் ஆணையர் கட்டுப்பாட்டில் 20 காவல் நிலையங்களும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

stalin

அதன்படி இனி சென்னை காவல் ஆணையரகம் 104 காவல் நிலையங்களுடன் மட்டுமே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தாம்பரம் சிறப்பு அதிகாரியாக ரவி, ஆவடி ஆணையராக சிறப்பு அதிகாரியாக சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பேற்றனர். மக்கள் தொகை அடிப்படையில் நிர்வாக வசதிக்காக தாம்பரம் ஆவடி காவல் ஆணையரகம் பிரிக்கப்பட்டுள்ளது. நிர்வாக வசதிக்காக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம்,   ஆவடி மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் என மூன்றாகப் பிரித்து அரசாணை வெளியிடப்பட்டது.

stalin

கடந்த ஒரு வாரமாக உள்துறை செயலாளர் பிரபாகர் ,டிஜிபி சைலேந்திரபாபு ,சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி எல்லைகள் அளிக்கப்பட்டது.அதன்படி  புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆவடி மற்றும் தாம்பரம் புதிய காவல் ஆணையரகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.