தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் : தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி..

 
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் : தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி..

 
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவியில்  போட்டியிட்ட தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்றுள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம்.  தென் இந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் இந்திய திரைப்பட சம்மேளனத்தில் நிர்வாகிகளாக உள்ளவர்கள் தவிர, வேறு சங்கங்களில் நிர்வாகிகளாக உள்ளவர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில்  போட்டியிட தகுதியில்லை என கவுன்சில் விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  

தயாரிப்பாளர்

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் மற்றும் நீதிபதி வி.பாரதிதாசன் ஆகியோரை நியமித்தது.  இதனையடுத்து தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், இரண்டு செயலாளர்கள், ஒரு பொருளாளர், 26 செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று ( ஏப்ரல் 30) நடைபெற்றது.   அந்தவகையில்  சென்னை அடையாறு தனியார் கல்லூரியில்  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை  வாக்குப்பதிவு நடைபெற்றது.   

மொத்தம் உள்ள 1,406 வாக்குகளில் 1,107வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணிக்கை இன்று ( மே 1ம் தேதி) நடைபெற்றது. இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நலம் காக்கும் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேனாண்டாள் முரளி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி 2-வது முறையாக தயாரிப்பாளர் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தயாரிப்பாளர் சங்க பொருளாளராக முரளி அணியை சேர்ந்த சந்திரபிரகாஷ் ஜெயினும் வெற்றி பெற்றிருக்கிறார்.