காமராஜர் பெயரை இருட்டடிப்பு செய்த விவகாரம் - தமாகாவினர் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம்!!

 
ttn

காமராஜர் பெயரை இருட்டடிப்பு செய்த விவகாரத்தில் காமராஜர் படத்தை கையில் ஏந்தி தமாகாவினர் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் என அறிவித்த நாளான 07.10.1961 ஆம் நாளை கவனத்தில் கொண்டு, ஆண்டுதோறும் அக்டோபர் 7 ஆம் நாளில் இத்திட்டத்தை செயல்படுத்த முக்கிய காரணமாக இருந்த முக்கிய தலைவர்களுக்கு மரியாதை செய்வது வழக்கம். இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் நேற்று வெளியிட்ட அரசின் விளம்பரத்திலும் அரசின் சார்பில் மரியாதை செய்யும் நிகழ்ச்சியிலும் பெருந்தலைவர் காமராஜர் படமும் பெயரும் முழுவதுமாக இருட்டடிப்பு செய்யப்பட்டு இருந்தது.

ttn

இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்ஜி.கே.வாசன் எம்.பி  நேற்றைய தினம், பெருந்தலைவர் காமராஜர் பெயரை இருட்டடிப்பு செய்வதை யாரும் ஏற்க மாட்டார்கள் என்ற தலைப்பில் கண்டன அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

ttn

இந்நிலையில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.விடியல் சேகர் தலைமையில் கட்சியின் மாவட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொள்ளாச்சியில் பெருந்தலைவர் காமராஜர் படத்தை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினரால் 250 மேற்பட்டோர்  கைது செய்யப்பட்டனர். தமாகா தலைவர் ஜி.கே.வாசன்  கண்டன அறிக்கை மற்றும் தமாகாவினர் ஆர்ப்பாட்டம் எதிரொலியாக இன்று காலை அரசின் சார்பில் வெளிவந்த பத்திரிகை விளம்பரத்தில்  காமராஜர் படம் மற்றும் சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.