ஈபிஎஸ் உடன் த.மா.கா இளைஞரணி தலைவர் சந்திப்பு

 
tn

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பாஜக கூட்டணியில் சேர்ந்துள்ள நிலையில், அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜா, சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார். 

tn

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள ஈபிஎஸ் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றுள்ளது. பாஜகவுடன் த.மா.கா கூட்டணியை ஜி.கே.வாசன் உறுதிசெய்த நிலையில், திடீர் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. 

ep

ஒரு மணி நேர ஆலோசனைக்குப் பிறகு மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக  யுவராஜா கூறியுள்ளார். யுவராஜாவை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஈபிஎஸ்-ஐ சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.