தமிழ்நாடு வணிகர் பேரவைத் தலைவர் வெள்ளையன் காலமானார்

 
தமிழ்நாடு வணிகர் பேரவைத் தலைவர் வெள்ளையன் காலமானார்

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் காலமானார். 

Image


நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வெள்ளையன் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 76. இறுதி மூச்சுவரை வணிகர் நலனுக்காக செயல்பட்ட வெள்ளையன் குடும்பத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடக்க காலத்தில் பெருந்தலைவர் காமராஜர் மீது அளவற்ற பற்று கொண்டு தேசிய இயக்கத்தில் பணியாற்றியவர். பிறகு, வணிகப் பெருமக்களின் உரிமைகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் வணிகர் சங்கத்தை தொடங்கியவர். தம் வாழ்நாள் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் மூலம் வணிகப் பெருமக்களின் பாதுகாவலனாக திகழ்ந்தவர் வெள்ளையன் ஆவார்.