ராகுல் காந்தியின் பேரணியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

 
Voter Adikar Yatra Voter Adikar Yatra


பீகாரில் நடைபெற்று வரும் ராகுல் காந்தியின் பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.  

பிஹார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்திற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,  தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாகவும் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அத்துடன் வாக்கு திருட்டை கண்டித்து பீகார் மாநிலத்தில் அவர், வாக்காளர் அதிகார யாத்திரை என்னும் பெயரில் பேரணி மேற்கொண்டு வருகிறார். கடந்த 17ம் தேதி சசாரம் நகரில் தொடங்கிய யாத்திரை 1,300 கி.மீட்டருக்கு 16 நாட்கள் நடைபெறும் எனவும், வருகிற செப்.1ம் தேதி நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
Image

ராகுல் காந்தியின் இந்த யாத்திரையில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  வாக்கு திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் பேரணியில் பங்கேற்றுள்ளார். முன்னதாக காலை 7.30 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்ற அவர், 10.30 மணிக்கு பீகார் சென்றடைந்தார்.  தொடர்ந்து  முதலமைச்சர் ஸ்டாலின், நடைபயணத்தில் பங்கேற்றிருக்கிறார். திறந்தவெளி வாகனத்தில் ராகுலுடன் அவர் பேரணி செல்கிறார். இந்த பேரணியில் கனிமொழி எம்.பி.,  பிரியங்கா காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பிக்கள் கலந்துகொண்டுள்ளனர்.  ராகுல்காந்தி உடனான நடைபயணத்தில் பங்கேற்று விட்டு, பிற்பகல் 2.40 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்ப உள்ளார்