முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் புதிதாக அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோவி. செழியன், ராஜேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர். அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட பின்னர் முதல்முறையாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டத்தில் துறை நீதியான அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும், புதிய திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்தும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
அதேபோல் புதிய முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம், துறைசார்ந்த பிரச்சனைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு திட்டங்களை அந்தந்த துறைகள் முறையாக மக்களுக்கு கொண்டு செல்வது குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தின் இறுதியில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


