நாங்குநேரி மாணவனின் தாயாரிடம் வீடியோ காலில் ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்..

 
நாங்குநேரி மாணவனின் தாயாரிடம் வீடியோ காலில் ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்..


நாங்குநேரி மாணவரின் தாயாரிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட  முதல்வர் மு.க ஸ்டாலின், தைரியமாக இருக்குமாறு  ஆறுதல் கூறினார். மாணவரை சந்தித்து  சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நேரில்  நலம் விசாரித்தனர்.

நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து கொடூரமாக வெட்டிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  சாதிய வன்மத்தால் நடந்த இந்த கொடூர சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  படுகாயம் சின்னதுரை மற்றும் அவரது தங்கை சந்திரா செல்வி ஆகிய  இருவரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு  அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே 6 பேரும், இன்று காலை ஒருவர் என மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாங்குநேரி மாணவனின் தாயாரிடம் வீடியோ காலில் ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்..

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவரை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அப்போது தங்கம் தென்னரசுவின் செல்போன் மூலம் மாணவன் சின்னதுரையின் தாயாருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ காலில் பேசினார். பிள்ளைகள் இருவரது உடல்நலம் குறித்தும் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்,  தைரியமாக இருக்குமாறு  மாணவனின் தாயார் அம்பிகாவதியிடம்  ஆறுதல் கூறினார்.  முன்னதாக நாங்குநேரியில் நடைபெற்ற இந்த சம்பவம்,  நடுக்கத்தை ஏற்படுத்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.