இசைஞானிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை..!
லண்டனில் சிம்பொனி இசை அமைத்த இளையராஜாவை பாராட்டும் விதமாகவும், அவரின் 50 ஆண்டு சாதனையை புகழும் விதமாகவும், அவர் பிறந்தநாளான ஜூன் 2ம் தேதி சென்னையில் மிகப்பெரிய பாராட்டு விழா தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் என்று சட்டசபையிலேயே முதல்வர் அறிவித்தார். பின்னர் சில காரணங்களால் அந்த விழா தள்ளிப்போனது.
இந்த விழா, இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக அரசு சார்பில் நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்தி, தேவயாணி, இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட தமிழ் திரையுலகை சேர்ந்த பலர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இளையராஜா பெயரில் விருது வழங்கப்படும். இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.


