மக்களை தேடி மருத்துவ திட்டம்' சாதனை: 2.50 கோடி பேரின் நலம் காக்கப்பட்டுள்ளது - முதல்வர் ஸ்டாலின்..!

 
1 1
தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை:

நான்கு ஆண்டுகளில், 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ளது, மக்களை தேடி மருத்துவம். தடம் மாறாத பயணம், தொற்றா நோய்களின் கட்டுப்பாடு என சாதனை படைத்து, ஐ.நா., விருதை இத்திட்டம் வென்றுள்ளது.
 

இந்த திட்டத்தின் 2.50 கோடி பயனாளியான, தஞ்சாவூர் மாவட்டம் தென்னங்குடியைச் சேர்ந்த மனோன்மணிக்கு மருந்து பெட்டகத்தை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கியதற்கு வாழ்த்துகள்.
 

இந்த திட்டத்தை கண்காணித்து, சிறப்பாக செயல்படுத்தி வரும் துறையின் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், களத்தில் உறவென நின்று மக்களை கவனித்துக் கொள்ளும் மருத்துவ பணியாளர்களுக்கும் வாழ்த்துகள்.

இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.