‘சமூக நீதி நாள்..’ உறுதிமொழியேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில் ராணுவ அணிவகுப்பு மைதானத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியாரின் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி, சமூகநீதி நாள் உறுதிமொழியை ஏற்றார். உறுதிமொழியை முதல்வர் வாசிக்க, அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் அந்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்!
தந்தை பெரியாரின் ஒவ்வொரு பிறந்தநாளும் “சமூகநீதி நாளாக” கடைபிடிக்கப்படிகிறது. முன்னதாக கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம்தேதி சட்டசபையில், தந்தை பெரியாரின் ஒவ்வொரு பிறந்தநாளும் “சமூகநீதி நாளாக” கடைபிடிக்கப்படும் என்று அறிவித்த முதலைச்சர் மு.க.ஸ்டாலின், சமூக நீதி நாளில் “சமூகநீதி நாள் உறுதிமொழியேற்க வேண்டும்” என்று அறிவித்திருந்தார்.
அதன்படி , தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தலைமை செயல்கத்தில் ராணுவ அணிவகுப்பு மைதானத்தில், பெரியாரின் உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் சமூக நீதி நாளுக்கான உறுதிமொழியை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார். உறுதிமொழியை முதலமைச்சர் வாசிக்க, அமைச்சர்கள், அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.