நாளை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!

 
1 1

 திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டு உள்ளார். 

அதில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை(செப்.9) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.இந்த கூட்டம் நாளை நண்பகல் 12 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திமுக முப்பெரும் விழா, ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துவார் என்று துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.