வடகிழக்கு பருவமழை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை..!

 
stalin

வடகிழக்கு பருவமழை தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.  

தமிழகத்தில் நாளை ( அக்.15) வடகிழக்கு பருவமழை தொடங்குவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனையொட்டி  தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அத்துடன் இன்று வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில்  காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாலும் அடுத்த 4 நாட்களுக்கு தொடர் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

rain

அதிலும் நாளை  (அக்டோபர் 15) மற்றும்  நாளை மறுநாள் (அக்டோபர் 16) ஆகிய 2 நாட்கள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  20.செ.மீ மழை பதிவாகலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதேபோல் வடதமிழக மாவட்டங்களான இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது. 

govt

இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இன்று காலை  11 மணிக்கு , தலைமைசெயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.  இதில் சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள், மண்டல வாரியாக நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் உள்ளிட்டோர் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.