பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

 
Q Q

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களுக்கு முழுமையான நிதியை உடனே விடுவிக்க வேண்டும். தமிழகத்துக்கு புதிய திட்டங்களை அனுமதிக்க உரிய அறிவுரைகளை ரயில்வே அமைச்சகத்துக்கு வழங்க வேண்டும் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிதி வழங்கவில்லை. அதனை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு 2500 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த, நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 931 ஹெக்டேர் நிலங்களுக்கு ரயில்வே துறை நிதி ஒதுக்கவில்லை. 94 சதவீத நிலங்களை கையகப்படுத்தும் பணி முடிந்து, அவை ரயில்வே துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

5 திட்டங்களுக்கு ரயில்வே துறையால் நிலத்திட்ட அட்டவணை இன்னும் வழங்கப்படவில்லை. நில எடுப்பு, இழப்பீடு வழங்குவதை விரைவுபடுத்துவதற்கு ஏதுவாக தாமதமின்றி நிதி விடுவிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.