டி.ஆர்.பாலு மனைவி ரேணுகா தேவி மறைவு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

 
mk stalin write a letter to jaishankar about fishermen arrest mk stalin write a letter to jaishankar about fishermen arrest

முன்னாள் ஒன்றிய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவின் துணைவியாரும்,  தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான திருமதி ரேணுகாதேவி பாலு  மறைவையொட்டி  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் தெரிவித்துள்ளார்.,  

 இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்திகுறிப்பில், “முன்னாள் ஒன்றிய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு அவர்களின் துணைவியாரும்,  தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்களின் தாயாருமான திருமதி ரேணுகா தேவி பாலு அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். கணவரும் மகனும் பொதுவாழ்க்கையில் ஈடுபட உறுதுணையாக இருந்து, தமது அன்பாலும் அரவணைப்பாலும் அவர்களது பணிகளுக்கு ஊக்கமளித்து, அமைதியாக அவர்களது வெற்றியின் பின்னணியாக இயங்கியவர் திருமதி. ரேணுகா தேவி பாலு அவர்கள். அத்தகைய பெருந்துணையின் மறைவு எவராலும் ஈடுசெய்யவியலாத பேரிழப்பு. 

டி.ஆர்.பாலு மனைவி ரேணுகா தேவி மறைவு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

அன்னாரை இழந்து தவிக்கும் நண்பர் திரு. டி.ஆர்.பாலு, தம்பி திரு. டி.ஆர்.பி. ராஜா ஆகியோருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.