கோட்டை கொத்தளத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்.. சுதந்திர தின விருது வழங்கி கௌரவிப்பு..

 
கோட்டை கொத்தளத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்.. சுதந்திர தின விருது வழங்கி கௌரவிப்பு..   கோட்டை கொத்தளத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்.. சுதந்திர தின விருது வழங்கி கௌரவிப்பு..  


சுதந்திர தினத்தையொட்டி புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூவர்ணக் கொடியை ஏற்றினார்.  

நாடு முழுவதும் இன்று 79வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  தமிழக அரசின் சார்பில்  சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுந்தந்திர தின விழாவுக்காக ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டிருந்தன.  சுந்தந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை,   மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே வந்தபோது  முன்னும், பின்னும் சென்னை காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள்கள் அணிவகுப்புடன் அழைத்து வந்தன்ர்.  

Stalin

காலை 8.45 மணியளவில்  கோட்டை கொத்தளத்தின் முன்பாக வந்திறங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தலைமை செயலாளர் முருகானந்தம் வரவேற்றார்.  பின்னர் அங்கிருந்த முப்படை அதிகாரிகள், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தீர், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் ஆகியோர் மரபுப்படி முதலமைச்சருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.  தொடர்ந்து மேடையில் நின்றவாறு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,   அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் இருந்த மூவர்ணக் கொடியை  ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.  

Image
அதன்பிறகு தமிழர் விருது, இஸ்ரோ தலைவர் முனைவர் நாராயணனுக்கு  டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, தலைசால் தமிழர் விருதையும், ரூ.10 லட்சத்திற்கான காசோலையை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீனுக்கு  வழங்கி கௌரவித்தார்.  சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், நீதிபதிகள், எம்.பிக்கள்., எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள், தியாகிகளின் குடும்பத்தினர்  மற்றும்  அரசு உயர் அதிகாரிகள்  பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்..