கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்..!!

 
cm stalin cm stalin

கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் மற்றும் இளம் ஆய்வாளர்களுக்கான கலைஞர் நிதிநல்கை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, முத்தமிழறிஞர் கலைஞர் பதிப்பகத்தின் 8 புதிய நூல்களையும் வெளியிட்டார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 7-ஆம் ஆண்டு நினைவு தினைத்தையொட்டி,  'கலைஞர் மாணவ பத்திரிக்கை யாளர் திட்டம்' இளம் ஆய்வாளர்களுக்கான கலைஞர் நிதி நல்கை திட்டம் மற்றும் 8 நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.  இதில் கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் மற்றும் இளம் ஆய்வாளர்களுக்கான கலைஞர் நிதிநல்கை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, முத்தமிழறிஞர் கலைஞர் பதிப்பகத்தின் 8 புதிய நூல்களையும் வெளியிட்டார்

பத்திரிகை மீது ஆர்வம் கொண்டு வரும் இளைஞர்களுக்கு, பயிற்சி அளித்து அவர்களை மெருகேற்றும் விதமாக, உதயநிதி ஸ்டாலின்  முன்னெடுப்பில் கலைஞர் மாணவப் பத்திரிகையாளர்’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே போல் திராவிட இயக்க இளம் ஆய்வாளர்களைக் கண்டறிந்து, அவர்களை வளர்த்தெடுத்து ஊக்குவிக்கும் விதமாக கலைஞர் நிதிநல்கை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  

இந்த இரண்டு திட்டங்களையும் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இளம் ஆய்வாளர்கள் 15 பேருக்கு ஆண்டுக்கு தலா 1 லட்சம் என்ற வகையில் கலைஞர் நிதிநல்கை திட்டம்  தொடங்கப்பட்டுள்ளது. மேலும் முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் சார்பில், உருவாகியுள்ள 8 புதிய நூல்களை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார்.