மேட்டூர் அணையை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!!

 
ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பு ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பு


டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  

இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களுக்கு வருகை தருகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை  சென்ற  அவர், நேற்று காலை  சாலை மார்க்கமாக பெருந்துறை விஜயமங்கலம் சென்றார். அங்கு பெருந்துறை விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

 200க்கும் மேற்பட்ட அரங்குகள் 25 தலைப்புகளில் கருத்தரங்கம் என இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளில் ஒரு லட்சம் விவசாயிகள் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் 50,000 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  

நிரம்பியது மேட்டூர் அணை! கரையோர மக்களுக்கு பேராபத்து!!

இதனைத்தொடர்ந்து சேலத்திற்கு சென்றுள்ள அவர், இன்று காலை டெல்டா விவசாயிகளின் பாசனத்திற்காக  மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார்.   ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரை மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.  அந்தவகையில் இன்று ( ஜூன் 12) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.  இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  

இந்த  நீரினால், தஞ்சாவூர், நாகப்பட்டணம், திருவாரூர், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 16.40 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும். மேலும், 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.