தமிழக அரசின் திட்டங்களில் முதல்வரின் பெயர் இடம்பெறக்கூடாது - ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

 
Ungaludan Stalin Ungaludan Stalin


தமிழக அரசின் திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் முதல்வரின் பெயர் இடம் பெறக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


"உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பெயர்  இடம்பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை  நீக்க கோரியும் அதிமுக மக்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கை ,  சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரித்தது.  அப்போது வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி,  அரசு திட்டத்தின் பெயரில், அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார். ஆளும் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்துவது உச்சநீதிமன்ற மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு விரோதமானது என்றும், தமிழக அரசின் திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் முதல்வர் பெயரையோ, முன்னாள் முதல்வரின் புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டார்.  

high court

அதேநேரம், அரசு நலத்திட்டம் தொடங்குவது குறித்தோ, அதனை செயல்படுத்துவது குறித்தோ எந்த உத்தரவையும் தெரிவிக்கவில்லை என்று கூறிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் முதல்வர் பெயர் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கோரி அதிமுக அளித்த புகாரை தேர்தல் ஆணையம் விசாரிக்க இந்த வழக்கு தடையாக இருக்காது என்றும்  தெரிவித்துள்ளார்.