ரூ.15 கோடியில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம்- டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

 
tn govt tn govt

தஞ்சாவூர் மாவட்டம் மனோரா கடற்கரையில் ரூ.15 கோடியில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம் அமைப்பதற்கான பணிகள தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது. 

Image

வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்தியாவில் கடற்பசு இனங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.  மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் பாலூட்டி இனங்களைச் சேர்ந்த கடல் பசு, டால்பின் இப்பகுதியில் காணப்படுகின்றன. மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் முன்பு அதிக எண்ணிக்கையில் கடல் பசுக்கள் இருந்தன. தற்போது அவை வெகுவாக குறைந்துவிட்டன. கடற்பசு இனத்தையும் அதன் கடல் வாழ்விடங்களையும் பாதுகாக்கும் பொருட்டு மன்னார்வளைகுடா, பாக்விரிகுடா பகுதியில் “கடற்பசு பாதுகாப்பகம்“ அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. 

இதனை செயல்படுத்தும் வகையில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில், கடல் பசு வடிவிலான மையம், அருங்காட்சியகம், 4டி அரங்கம், பூங்கா, திறந்தவெளி அரங்கம், உணவகம், வாகன நிறுத்துமிடம், செல்ஃபி பாயிண்ட், குடிநீர் வசதி, மிகப்பெரிய அளவிலான முகப்பு ஆகியவை அமைக்கப்பட உள்ளன