சகாயத்திற்கு பாதுகாப்பு அளிப்பது பற்றி பரிசீலிக்கப்படும் - தமிழக அரசு

 
ஆவிகளை காட்டிலும் ஊழல் செய்யும் பாவிகள் அதிகம்- முன்னாள் ஐஏஎஸ் சகாயம் ஆவிகளை காட்டிலும் ஊழல் செய்யும் பாவிகள் அதிகம்- முன்னாள் ஐஏஎஸ் சகாயம்

உயிருக்கு அச்சுறுத்தல் என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்த புகார் குறித்து உள்துறை முடிவு செய்யும் என அரசு விளக்கம் அளித்துள்ளது.


பாதுகாப்பு இல்லாததால் கிரானைட் ஊழல் வழக்கில் ஆஜராக  முன்னாள் ஐ.ஏ.எஸ் சகாயம் மதுரை நீதிமன்றத்திற்கு வரவில்லை. தனக்கு கொடுத்து வந்த பாதுகாப்பை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றுக்கொண்டதால் தன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என கிரானைட் ஊழலை தமிழ்நாட்டிற்கு அம்பலப்படுத்திய சகாயம் ஐஏஎஸ் தனது பயத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப வழங்கும் வரை நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என்றும் சகாயம் கூறியுள்ளார். பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து அரசு தலைமை வழக்கறிஞருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு பாதுகாப்பு அளிப்பது பற்றி பரிசீலிக்கப்படும், யாருக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதை காவல் துறை, உளவுப்பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து உள்துறை முடிவு செய்கிறது. பாதுகாப்பு கோரி அளிக்கப்படும் கடிதத்தில் இருக்கும் விவரங்களின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.