தஞ்சையில் நிலக்கரி எடுக்க தமிழக அரசு அனுமதிக்காது - உதயநிதி திட்டவட்டம்..

 
udhayanidhi stalin


தஞ்சையில் பழுப்பு நிலக்கரி எடுக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும்  என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில்,   3வது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பகுதி காவிரிப் படுகையை ஒட்டியே அமைந்துள்ளது. அதிலும் மீதமுள்ள 6 நிலக்கரி சுரங்கங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.   அதன்படி, தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தஞ்சையில் நிலக்கரி எடுக்க தமிழக அரசு அனுமதிக்காது - உதயநிதி திட்டவட்டம்..
 
இந்தநிலையில், தஞ்சையில் பழுப்பு நிலக்கரி எடுக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது  என  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட தஞ்சையில் பழுப்பு நிலக்கரி எடுக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க தமிழக அரசு அனுமதிக்காது. திருவாரூர், தஞ்சை, மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க அனுமதி இல்லை. புதிய நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க தமிழக அரசு எக்காரணம் கொண்டும் அனுமதி அளிக்காது. நிலக்கரி சுரங்க விவகாரம் குறித்து நாளை சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிப்பார். புதிய நிலக்கரி சுரங்க விவகாரம் பற்றி சட்டப்பேரவையில் நாளை அறிவிப்பு வெளியிடப்படும்” என்று கூறினார்.