தமிழக அரசின் செம திட்டம் அமல்..! டெலிவரி ஊழியர்களுக்கு AC வசதியுடன் ஓய்வறை..!

 
1 1

உணவு விநியோகிக்கும் நிறுவனங்கள் பெருகிவிட்டதால், பலரும் அதிலேயே ஆர்டர் செய்கின்றனர். இதனால் இந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி ஆஃபரும் தருகின்றன. இதன் காரணமாக பெண்கள் இன்றைய நாட்களில் சமைப்பதையே மறந்து விட்டார்கள்.

அதே சமயம் உணவு விநியோகம் செய்யும் ஊழியர்களின் நிலையை கருத்தில் கொண்டால், அது மிகவும் பரிதாபகரமானதாகும். அதிலும் இன்றைய நாட்களில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் உணவு விநியோகம் செய்யும் தொழிலில் மிகுந்த முனைப்புடன் ஈடுபடுகின்றனர். இரவில் கூட பெண்கள் இருசக்கர வாகனத்தில் உணவு விநியோகம் செய்வதை தெருக்களில் காண முடியும்.ஆனால் அவர்களுக்கான எந்த பணிப் பாதுகாப்பும் இல்லை. இவர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்களாகவே கருதப்படுகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் ஆன்லைன் மூலம் உணவு விநியோகிக்கும் பணியாளர்களின் மாநாடு நடைபெற்றது.

தற்போது தங்களுக்கு போதிய பணி பாதுகாப்பை உறுதிப்படுத்தி, தங்களுக்கும் பிற ஊழியர்களைப் போல வசதிகள் செய்து தரப்பட வேண்டும் இணையதள உணவு விநியோக பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், இந்தியாவிலேயே முன்னோடியாக உணவு விநியோக பெண்கள் பயன்கள் பெறும் வகையில், சென்னையில் அவர்களுக்காக ஓய்வு அறை அமைக்கப்பட்டுள்ளது.  20 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்ட இந்த ஓய்வறையில், 25 பெண்கள் வரை ஒரே நேரத்தில் இளைப்பாறலாம்.குளு குளு ஏசி வசதியுடன் கைபேசிக்கான சார்ஜிங் பாய்ண்ட் இங்கு அமைக்கப்பட்டது. இதன் மூலம் இரவில் உணவு விநியோக செய்யும் பெண்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இங்கு கட்டணம் இன்றி இளைப்பாறிக் கொள்ளலாம்.

இந்த குளு குளு ஓய்வறைகள் அண்ணா நகரில் இன்று முதல் சோதனை அடிப்படையில் திறக்கப்பட்டுள்ளது சென்னையில் மயிலாப்பூர், தி. நகர், கே.கே.நகர், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை போன்ற பகுதிகளில் இதுபோன்ற ஏசி ஓய்வறைகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாடு அரசு செயல்படுத்திய இந்த திட்டம் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு திட்டமாக பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை மற்ற மாநிலங்கள் பின்பற்றத் தொடங்கி விடடன. இதேபோல் உணவு டெலிவரி ஊழியர்களுக்கு ஓய்வறை திட்டத்தையும் மற்ற மாநிலங்கள் பின்பற்றத் தொடங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.