சட்டப்பேரவையில் தமிழ்நாடு ஆளுநர் ரவியின் EXIT வரலாறு!
தமிழ்நாடு கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார்.
![]()
இந்நிலையில் சட்டப்பேரவையில் வாசிக்கப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி உரையின் வரலாறு குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
2022
> தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனது முதல் உரையை முழுமையாக படித்தார். அரசின் அறிவிப்புகள், திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்
2023
> "உரையில் இருந்த மகளிர் முன்னேற்றம், மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், கலைஞர் ஆகிய சொற்களை உச்சரிக்காததால் அவையில் பிரச்னை எழுந்தது. அரசு கொடுத்த உரையில் இருப்பதுதான் அவையில் நிறைவேறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேருக்கு நேர் பதிலடி கொடுக்க, ஆளுநர் அவையில் இருந்து வெளியேறினார்
2024
> உரையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்படுகிறது, தேசிய கீதம் பாடப்படுவது இல்லை எனக்கூறி உரையை வாசிக்காமல் அமர்ந்தார். சபாநாயகர் அப்பாவு உரையை வாசித்தார்
2025
> முந்தைய ஆண்டில் கூறிய அதே காரணத்தை மீண்டும் எழுப்பி, அவையில் இருந்து உரையை வாசிக்காமல் வெளியேறினார்
2026
> அவையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடவில்லை எனக் கூறி மீண்டும் உரையை வாசிக்காமல் வெளியேறினார்.


