தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆயுத பூஜை வாழ்த்துகள்..!
நாடு முழுவதும் ஆயுத பூஜை பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை சுப தினத்தில் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். சரஸ்வதி தேவி நம் பாதையை தனது கலைத்திறன் மற்றும் ஆழ்ந்த ஞானத்தால் ஒளிரச் செய்து, அறியாமை இருளை அகற்றி, நம் அனைவருக்கும் வளத்தையும், மகிழ்ச்சியையும் வழங்கட்டும்.

இந்த ஆயுத பூஜை நமக்கு மிகச்சிறந்த புதுமை மற்றும் மீள்திறன் உலகை வடிவமைக்கத் தேவையான சிறந்த படைப்பாற்றல் மற்றும் திறன்களை உரித்தாக்கட்டும். ஒரே குடும்பமாக நாம் இணைந்து 2047ம் ஆண்டுக்குள் அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் முழுமையாக வளர்ந்த இந்தியாவை உருவாக்குவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
On the auspicious Saraswathi Poojai and Ayudha Poojai, heartfelt greetings to all! May Goddess Saraswathi illuminate our path with her virtuosity and profound wisdom, dispelling the darkness of ignorance and bestowing prosperity and joy to us all. May this Ayudha Pooja bring us… pic.twitter.com/jQJLfTOTXR
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) October 11, 2024


