கோவையில் தங்க நகை பூங்கா : டெண்டர் கோரிய தமிழ்நாடு அரசு..!!
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின் படி கோவையில் தங்க நகை பூங்கா அமைப்பதற்காக, தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.
அண்மையில் 2 நாள் சுற்றுப்பயணமாக கோவை சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குறிச்சி தொழிற்பேட்டையில் ரூ.126 கோடி மதிப்பில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, ரூ. 45 கோடியில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியுள்ளது சிட்கோ நிறுவனம்.

கோவை மாவட்டம் குறிச்சியில், 2.46 ஏக்கரில், 8.5 லட்சம் சதுரடியில் தொழிற்பூங்கா அமைக்கப்பட உள்ளது. 2.46 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த தங்க நகை பூங்காவை தரைத் தளம் மற்றும் 5 தளங்கள் கொண்ட கட்டிமாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், நகைப்பட்டறைகள், 3டி பிரிண்டிங், லேசர் பிரிண்டிங், ஹால்மார்க் தர பரிசோதனை கூடம், பாதுகாப்பு பெட்டகம், கூட்டரங்கம், பயிற்சி மையம் அமைய உள்ளது.


