தனி மொழி அடையாளம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு..!! இந்தி திணிப்பை ஏற்க முடியாது - ரயில்வே அமைச்சருக்கு ஆ.ராசா கடிதம்..
இந்தித் திணிப்பை ஏற்க முடியாது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவுக்கு , திமுக எம்.பி., ஆ.ராசா கடிதம் எழுதியுள்ளார்.
ஊட்டி ரயில் நிலைய சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த பதாகை ஒன்றில், “சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலை செல்வங்கள் யாவும் கொண்ர்ந்து இங்கு சேர்ப்பீர்’ என்கிற வாசகம் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அச்சிடப்பட்டிருந்தது., ஆனால் இந்த கவிதை வரி ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ என்கிற பாரதியாரின் கவிதை வரிகள் ஆகும். இதனை இந்து மகா சபை நிறுவனர் மதன்மோகன் மாளவியா எழுதியாத அந்த பதாகையியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் மற்றொரு பதாகையில், இந்தியை பற்றி சிறு பேச்சு அறிவு மூலமாக இந்தி பேசத் தெரிந்த் மக்கள் நிறைய காரியங்களை சாதிக்கின்றனர்” என்கிற வாசகம் இடம்பெற்றுள்ளது.

அந்தப்புகைப்படத்தை பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ள திமுக எம்.பி., ஆ.ராசா, “ இந்தித் திணிப்பை ஏற்க முடியாது..! இந்திய இரயில் நிலையங்களில் இந்திப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக எனது நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் 100 ஆண்டுகள் பழமை கொண்ட உதகமண்டலம் இரயில் நிலையத்தில் இந்தியில் நிறுவப்பட்டுள்ள பதாகைகள், தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கக்கூடிய வகையில் உள்ளன. உடனடியாக அவற்றை அகற்ற உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாடு ஒருநாளும் இந்தித் திணிப்பை ஏற்காது. தமிழ்நாடு தனக்கென தனி மொழி அடையாளம் கொண்ட மாநிலம். இங்கு இந்தியை திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது ” என்று குறிப்பிட்டுள்ளார்.


