தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது - முதலமைச்சர் ஸ்டாலின்..!

 
1 1

வேளாண்மை மற்றும் தோட்டக்கலை விளைபொருட்களின் மதிப்புக்கூட்டுதல், பதப்படுத்துதல் போன்ற தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து உள்ளூர் மற்றும் ஏற்றுமதி சந்தை வாய்ப்பினை அதிகரித்தல், கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்கள், உற்பத்தியாளர்கள்- வணிகர்கள் சந்திப்பு போன்ற பல்வேறு அம்சங்களுடன், உழவர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மாணவர்கள், பொதுமக்கள், உணவு பதப்படுத்தும் அமைப்புகள், ஏற்றுமதியாளர்கள், இயற்கை நல ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த ஆண்டின் 2-வது நிகழ்வாக “வேளாண் வணிகத் திருவிழா-2025 ”நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களில் நடக்கறது 

வேளாண் வணிகத் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சற்றுமுன் தொடங்கி வைத்தார். , 200க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வேளாண் பொருள்கள், விதைகள் உள்பட வேளாண் சம்பந்தப்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகளை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்.இதையடுத்து அங்கு  நடைபெற்ற  விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, புவிசார் குறியீடு பெற்ற வேளாண் பொருட்கள் அடங்கிய நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.இதை தொடர்ந்து, ஜனவரி மாதம், மதுரை மற்றும் திருநெல்வேலியில் வணிக திருவிழா நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 

இந்நிலையில் , வேளாண் வணிகத் திருவிழா உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

* தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது.

* தமிழ்நாடு கல்வியில் மட்டுமல்ல பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகிறது.

* வேளாண்மையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு என்று சொல்லுமளவுக்கான விழா இது.

* விவசாயிகளுக்கு வேளாண் வணிக வாய்ப்புகளை தெரிந்து கொள்ளும் தளமாக உள்ளது.

* விவசாய பொருட்கள் ஏற்றுமதிக்கான வாய்ப்பு மேலும் அதிகரிக்கும்.

* வேளாண் அதிகரிப்பதுடன் உழவர்களின் வாழ்வும் உயர வேண்டும்.

* வேளாண் துறை என்ற பெயரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என மாற்றி அறிவித்தது தி.மு.க. அரசு.

* உழவர்களின் கருத்து, விருப்பத்தை கேட்டு செயல்படும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.