அதிகமாக நகரமயமாக்கல் கொண்ட மாநிலம் தமிழகம்: முதல்வர் ஸ்டாலின்

 
stalin

சென்னையை அடுத்த நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

stalin

நெம்மேலியில் ₹2,465 கோடியில் அமைக்கப்பட்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றிய போது,  "எனது இதயத்திற்கு நெருக்கமான திட்டம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம். ரூ.1,802 கோடி மதிப்பீட்டில் 39 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அமைச்சர் நேரு எதையும் நேர்த்தியாக, பிரமாண்டமாக செய்யக்கூடியவர்.

stalin

அதிகமாக நகரமயமாக்கல் கொண்ட மாநிலம் தமிழகம்'| அதிகப்படியான நகரமயமாக்கல் வசதிகள் கொண்ட மாநிலம் தமிழகம்; கடுமையான நிதிநெருக்கடியிலும் ரூ.100 கோடியில் குடிநீர் திட்டங்களை வழங்கி வருகிறோம் நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் மூலம் சுமார் 9 லட்சம் மக்கள் பயனடைவர்; சுத்திகரிப்பு நிலையம் மூலம் தென்சென்னை பகுதிகளுக்கு குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும்.  கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தால் 10 லட்சம் வடசென்னை மக்கள் பயன்பெறுவர்; தென் சென்னை மக்களும் புதிய திட்டத்தால் பயனடைய உள்ளனர்; கடும் நிதி நெருக்கடிக்கு இடையிலும் ரூ.100 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.  இன்று அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் திட்டமிடப்பட்ட காலத்திற்கு  முன்பே முடிக்கப்படும்  என்றார்.