தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்!

 

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்!

திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நேற்று முதல் முறையாக முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் சட்டமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது . சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் கல்வி, வேலைவாய்ப்பு ,தொழில்துறை, மருத்துவம், கோவில் என ஒவ்வொரு துறையிலும் திட்டங்கள் வகுப்பதுடன் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அறிவிப்புகள் நேற்று வெளியிடப்பட்டன. அத்துடன் குடும்ப தலைவிக்கு ரூபாய் 1000 என்று அறிவிப்பு தகுதியானவருக்கே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்!

இந்த சூழலில் இன்று முதல் முறையாக வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் வேளாண் துறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்!

அந்த வகையில் இன்று தமிழ்நாடு அரசு முதல் முறையாக இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். முன்னதாக விவசாயிகள், விவசாய சங்கங்களிடம் கருத்து [கேட்கப்பட்டது. அத்துடன் பட்ஜெட்டில் சிறப்பம்சமாக இயற்கை வேளாண்மைக்கு ஆதரவு உள்ளிட்டவை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.