தேசிய மருத்துவ ஆணையத்திற்கு தமிழ்நாடு மருத்துவத்துறை கடிதம்!

 
doctor doctor

தமிழ்நாட்டில் காலியாக உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை மாநிலத்துக்கே வழங்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையத்திற்கு தமிழ்நாடு மருத்துவத்துறை கடிதம் எழுதியுள்ளது.

doctors

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய MBBS இடங்களில், 83 இடங்கள் 4 கட்ட கலந்தாய்விலும் நிரம்பவில்லை. காலியாக உள்ள இடங்களை மாநிலங்களுக்கே திரும்ப வழங்க மாட்டோம் என்ற மருத்துவ கவுன்சிலின் பிடிவாதத்தால் அரசு மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளில் 83 MBBS இடங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

masu

இந்நிலையில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை மாநிலத்துக்கே வழங்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையத்திற்கு தமிழ்நாடு மருத்துவத்துறை கடிதம் எழுதியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ இடங்கள் வீணாவதை தடுக்க வலியுறுத்தியும், காலியாக உள்ள இடங்களை மாநிலத்திற்கே வழங்கவும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்ப மருத்துவத்துறை முடிவு  எடுத்துள்ளது.