தமிழக எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.15 லட்சத்தில் கார் மற்றும் மாத சம்பளம் ரூ.1.80 லட்சமாக உயர்வு: அரசாணை வெளியீடு!
Oct 23, 2026, 05:55 IST1792715120000
தமிழகத்தில், எம்.எல்.ஏ.,க்களுக்கு மாத ஊதியமாக 1.05 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி, அவசர கால மருத்துவ செலவிற்கு 12 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இந்நிலையில், ‘எம்.எல்.ஏ.,க்களுக்கு கார் வழங்கப்படும்.
இதற்காக டிரைவர் மற்றும் எரிபொருள் செலவிற்கு, 75 ஆயிரம் ரூபாயும், அலுவலக உதவியாளரை நியமித்து ஊதியம் வழங்க, 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்’ என சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி, எம்.எல்.ஏ.,க்களுக்கு கார் வழங்குவதற்கு, 15 லட்சம் ரூபாய் வரை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மாவட்ட கலெக்டர்கள் வாயிலாக இந்த தொகை விடுவிக்கப்படவுள்ளது. டிரைவர், எரிபொருள், உதவியாளர் ஊதியம் சேர்த்து எம்.எல்.ஏ.,க்களின் மாத ஊதியம் 1.80 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

