தமிழ்நாடு அலுவல் சார் மொழிகள் ஆணையம் - சட்டத்துறை செயலாளர் கோபி ரவிக்குமார் தலைமையில் குழு

 
govt

தமிழ்நாடு அலுவல் சார் மொழிகள் ஆணையத்தின் தலைவராக தமிழ்நாடு சட்டத்துறை செயலாளர் கோபி ரவிக்குமார் தலைமையில் குழு அமைத்து  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

tn govt

அரசல் அலுவல் மொழியாக அரசு நிர்வாகத்தில் எல்லா மட்டங்களிலும் பயன்படும் மொழி ஆட்சிமொழி அல்லது அலுவலக மொழி எனப்படுகிறது. அவ்வாறு தமிழ் பயன்படும் பொழுது அதை ஆட்சித் தமிழ் எனலாம்.பயன்பாட்டுத் தேவையை சூழலைப் பொறுத்து மொழியின் தன்மையும் சற்று வேறுபடும்.  தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய பகுதிகளிலும் இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் தமிழ் அரச அலுவலக மொழியாக இருக்கிறது

மக்கள் தம் எண்ணங்களை தடங்கலற்று வெளிப்படுத்த தாய்மொழியே தகுந்த மொழியாகும். மக்களின் நலனுக்காக ஆட்சிபுரியும் அரசு நிர்வாகம், மக்கள் மொழியில் நடைபெறுவதே முறை என்று ஆட்சிமொழிச் சட்டம் 1956ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு 1957ஆம் ஆண்டு  ஆளுநரின் ஒப்புதல் பெற்று, ஜனவரித் திங்கள் 23-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.

th

 தமிழ்நாடு அலுவல் சார் மொழிகள் ஆணைய தலைவராக சட்டத்துறை செயலாளர் கோபி ரவிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோபி ரவிக்குமார் தலைமையில்  ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் முகமது ஜெய்புதீன், சரோஜினி தேவி உள்ளிட்டோர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டு  அரசாணை தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது