தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் அமைச்சர் பொன்முடி!!
Nov 8, 2023, 10:57 IST1699421223532
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார்.
ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து 2வது முறையாக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் அமைச்சர் பொன்முடி. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பங்கேற்கவில்லை.
விடுதலைப் போராட்ட வீரர் சங்கரையாவுக்கு கெளரவ முனைவர் பட்டம் வழங்க ஒப்புதல் வழங்காத ஆளுநரைக் கண்டித்து, அமைச்சர் பங்கேற்கவில்லை. ஏற்கனவே, மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணித்திருந்தார் அமைச்சர் பொன்முடி என்பது குறிப்பிடத்தக்கது.