" 'இந்தியா' கூட்டணி வென்றால் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்படும்" - அமைச்சர் உதயநிதி

 
tn

தஞ்சை திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தன்னாட்சி அமைப்புகளிலும் தனது ஆட்சியை நடத்தும் பாசிஸ்ட்டுகளுக்கு முடிவுரை எழுத, வெற்றியை எதிர்நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறது INDIA கூட்டணி.

tn

அந்த வகையில், நம் வெற்றிக் கூட்டணி சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் சகோதரர் முரசொலி அவர்களுக்கு ஆதரவாக பட்டுக்கோட்டையில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டோம்.


மாநிலங்கள் நிலைக்க - தேர்தல் ஜனநாயகம் நீடிக்க ஆதரிப்பீர் உதயசூரியன் என்று மக்களிடையே உரையாற்றினோம் என்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன் பரப்புரையின் பேசிய போது,  2010ல் நீட் தேர்வை தமிழ்நாட்டில் நுழைய விடாதவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி; 'இந்தியா' கூட்டணி வென்றால் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்படும். சிஏஏ சட்டத்தை கொண்டு வந்தது பாஜக அரசு; ஆதரித்தது அதிமுக என்று தெரிவித்தார்.