9 மாதத்தில் ரூ.1.43 லட்சம் கோடி முதலீடு - முதலிடத்தில் தமிழ்நாடு!!

 
TNGOVT

தமிழகத்தில் தொழில் துறை நிறுவனங்கள் பல வெற்றிகரமாக இயங்கி வருகிறது. அதிகப்படியான முதலீடுகளின் விரிவாக்கமும் , மத்திய,  மாநில அரசு செய்து வரும் வேளையில் தனியார் நிறுவனங்களும் , அதிக முதலீடுகளை செய்து இருக்கிறது.  கடந்த  மாதத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் கிரீவெஸ் காட்டன் இந்தியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக்கல் மொபிலிட்டி பிரிவில் செப்டம்பர் காலாண்டில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்தது.  புதிய எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யவும் சுமார் 700 கோடி ரூபாய் முதலீடு உடன் தமிழ்நாட்டில் வாகன உற்பத்தி தளத்தை அமைக்க உள்ளதாக அறிவித்தது.

stalin

அதேபோல் தொழில் துறை சார்பில் முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு விழாவில் கடந்த டிசம்பர் மாதம்  49  திட்டங்களின் மூலம் 28 ஆயிரத்து 508 கோடி ரூபாய் முதலீட்டில், 83 ஆயிரத்து 482 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. 35 தொழில் முதலீடு உங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளுதல், 4250 கோடி முதலீட்டில் , 20 ஆயிரத்து 630 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில்,  9 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் 7 ஆயிரத்து 117 கோடி முதலீட்டில் 6 ஆயிரத்து 798 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஐந்து திட்டப்பணிகளை தொடக்கி வைத்தார் முதல்வர் முக ஸ்டாலின்.

stalin

இந்நிலையில் 2021 – 22 நிதியாண்டில் முதல் 9 மாதத்தில் தமிழ்நாடு ரூ.1,43,902 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது. நாட்டிலேயே அதிக முதலீடுகளை ஈர்த்துள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.