தமிழ்நாட்டில் 6 இடங்களுக்கு ஜூன் 19-ல் மாநிலங்களவை தேர்தல்!
தமிழகத்தில் காலியாகவுள்ள 6 இடங்களுக்கு ஜூன் 19-ல் மாநிலங்களவை தேர்தல் நடத்தப்படவுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரடியாக தேர்வு செய்ய முடியாது. ஆனால் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களை வைத்து அவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதன்படி தமிழ்நாட்டி பொறுத்தவரையில் தற்போது எம்பியாகவுள்ள 6 பேரின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக எம்.பிக்கள், வில்சன், எம்.சண்முகம், முகமது அப்துல்லா, அதிமுக MP சந்திரசேகரன் உள்ளிட்ட 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனையடுத்து ஜூன் 19ம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளது. ஜூன் 2 முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கும் நிலையில், வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய ஜூன் 9ம் தேதி கடைசி நாள் ஆகும்.


