’அனைவரது வாழ்விலும் வெற்றியை தர வேண்டும்’ - தமிழிசை, எல்.முருகன் வாழ்த்து..

 
tamilisai tamilisai

பாஜக மூத்த நிர்வாகியான தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் நாட்டு மக்களுக்கு ஆயுத பூஜை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.  
 
பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்:  “இசை... ஞானம்... அறிவு... கலை மற்றும் அறிவியல் ஆகியவற்றின் தெய்வமான சரஸ்வதி தேவிக்கு நன்றி செலுத்திடும் வகையில் நாடு முழுவதும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி பக்தி உணர்வோடு கொண்டாடப்படுகிறது. கல்வியில் சிறந்து விளங்கவும் தொழில் வளம் பெருகவும் நவராத்திரி பண்டிகையின் ஒன்பதாம் நாளில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. 

l murugan

 நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் கருவியாகவும், அறிவாகவும் இருந்து செயல்படும் இறையருள் அனைவரின் வாழ்விலும் வெற்றியைத் தர வேண்டும். இந்த நன்னாளில் நம் நாட்டு மக்களுக்கு ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்களை கூறி நல்லறிவு, திறன், மகிழ்ச்சி மற்றும் அனைத்து வளங்களும் நாம் அனைவரின் வாழ்விலும் பெற்றிட இந்த நவராத்திரியில் நாம் வணங்கும் இறை சக்தி அருள் புரியட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.  

மத்திய இணையமைச்சர் எல். முருகன்: “கல்வி, செல்வம், வீரம் இவை மூன்றையும் தரும் தெய்வங்களை வழிபடும் இந்தத் திருநாளில் - அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள். வாழ்வில் இருள் நீங்கி, கல்வி எனும் வெளிச்சம் செல்வத்தை அள்ளித் தந்திடவும், வீரம் என்னும் ஆயுதத்தை ஏந்தி உலகை வெற்றி பெற்றிடவும் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாடு ஏற்றம் பெறவும், உலகம் நமது தேசத்தை புகழ்ந்திடவும், நாள்தோறும் உழைக்கும் ஒவ்வொருவரையும் இந்தத் தருணத்தில் நினைவு கூர்ந்து வணங்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.