பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் - தமிழிசை
நம் இந்திய திருநாட்டின் மிகப்பெரிய விருதுகளான பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ள மாண்புமிகு முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு அவர்களுக்கும்,கலைத்துறை சாதனையாளர்கள் தெலுங்கு திரைப்பட நடிகர் திரு.சிரஞ்சீவி அவர்களுக்கும்,பரத நாட்டியக்கலைஞர்கள் ஸ்ரீமதி.வைஜெயந்திமாலா பாலி அவர்களுக்கும்,ஸ்ரீமதி.பத்மா சுப்பிரமணியம் அவர்களுக்கும், பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ள தனது திரைப்படங்களின் மூலம் தேசப்பற்றை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்து கலைத்துறையில் சாதனை புரிந்த சகோதரர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கும்,
நம் இந்திய திருநாட்டின் மிகப்பெரிய விருதுகளான பத்மவிபூஷன்,பத்மபூஷன்,பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) January 26, 2024
பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ள மாண்புமிகு முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு… pic.twitter.com/sa68cvVDla
பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள வள்ளி கும்மி மற்றும் ஒயிலாட்ட கிராமிய நடனக்கலைஞர் திரு.பத்ரப்பன் அவர்களுக்கும்,தமிழ் இலக்கிய சாதனையாளர் திரு.ஜோ டி குரூஸ் அவர்களுக்கும்,மருத்துவத்துறை சாதனையாளர் டாக்டர்.நாச்சியார் அவர்களுக்கும்,கலைத்துறை சாதனையாளர் சேஷம்பட்டி திரு.சிவலிங்கம் அவர்களுக்கும்,விளையாட்டு வீராங்கனை செல்வி.ஜோஸ்னா சின்னப்பா அவர்களுக்கும் மற்றும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் சேவையாற்றும் பாமர மக்களை தேடி தேடிச் சென்று பத்ம விருதுகள் அளித்து கெளரவிக்கும் பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.